சிவனின் அடியார்களாகப் போற்றப்படும் நாயன்மார்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். அவர்களின் அருமை, பெருமைகளை பேசுகிறது. பக்தர்களால் பெரிதும் அறியப்பட்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி கூடுதல் தகவல்களை தருகிறது. பிற நாயன்மார்களை பற்றிய விபரங்களும் உள்ளன.
சிவன் கோவில்களில் உற்சவ மூர்த்திகளாக விளங்கும், 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, இறை தொண்டுகளை தொகுத்த பெருமை சேக்கிழாரை சாரும்.
சேக்கிழார் குறித்தும், அவரது எழுத்தின் சிறப்பு பற்றியும் சுவைபட விளக்குகிறது. பெரிய புராணத்தின் சுருக்கமாக, அடியவர்கள் செய்த அற்புதங்களையும், பெருமைகளையும் அறிய செய்யும் வகையிலான நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்