புத்த மதம் பரப்பிய அசோக மன்னன், அவரின் வழித்தோன்றல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று குறுநாவல். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தில் இருந்து ஒரு கன்றை எடுத்து, இலங்கையில் நிறுவுவதை மையப்படுத்தி சொல்கிறது.
சங்கமித்திரையை மையப்படுத்தி கதை நகர்கிறது. வரலாற்று நாவலுக்கே உரிய புனைவு ஜொலிக்கிறது. யாரையும் பழிக்காமல் மனிதர்களை இயல்பான போக்கில் விட்டு நகர்த்துகிறது. அன்பை மட்டும் போதிக்கும் விதமாக உள்ளது. புத்த மத நெறியை ஆன்மாவாக கொண்டுள்ளது. மகளை துறவுக்கு அனுமதிக்கும் மன்னனின் மனதை நுட்பமாக தெரிவித்து விரிவாக பேசியுள்ளது.
கதை நடக்கும் இடங்களை காட்சியாக்கி மனக் கண்ணில் பதிய வைக்கிறது. நம்பகத்தன்மையுள்ள வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.
– ஒளி