அம்பேத்கரின் லட்சியத்துடன் பிரதமர் மோடியின் ஆட்சிக்கால வளர்ச்சியை ஒப்பிடும் நுால். அம்பேத்கர் தீர்க்க தரிசனத்தை பிரதமர் மோடி செயல்படுத்துவது பற்றி கூறப்பட்டு உள்ளது.
மேம்பாட்டுக்கு அம்பேத்கர் போட்ட அஸ்திவாரம் குறித்து பிரதமர் சுட்டிக் காட்டியது பொருத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டை பொருளாதாரம், தொழில்நுட்ப ரீதியாக திறன்மிக்கதாக்கும் நடவடிக்கை தொகுத்து தரப்பட்டுள்ளது. தொழில் வளம், சமூக நீதி, பெண் விடுதலை தளங்களை ஒப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தொழில் முன்னேற்றத்தில், ‘மேக் இன் இந்தியா’ முக்கிய மைல் கல்லாக முன் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகளை மேம்படுத்துதல், நதி நீர் இணைப்பு, நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் குறித்தும் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ள நுால்.
– முகில் குமரன்