குழந்தைகளின் உளவியலை புரிந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். காணாமல் போன பாட்டியை, முதியோர் இல்ல விழாவில் பார்த்து பரிதவிக்கும் பேத்தியின் பாசத்தை, ‘அம்மணிக் கொழுக்கட்டை’ கதை புரிய வைக்கிறது.
முன்னோர் பண்பாட்டு தடயத்தை தேடும் விதமாக ‘இனிமைக்கு இந்தியா, நிலாத் துாக்கம்’ கதைகள் துாண்டுகின்றன. புத்தகத்தை நேசிக்கும் சிறுமியின் சிறப்பை, ‘அம்மா மனதிலிருந்து ஒரு புத்தகம்’ கதை கண்டெடுக்கிறது.
சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஆராயும் குழந்தைகள், அவற்றை பல கோணங்களில் அடையாளம் காட்டும் திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பதை வைத்து நிறைவாக வாழப் பழக்குகிறது. குழந்தைகளின் எண்ண ஓட்டத்தில் கற்பிக்கும் நுால்.
– -டி.எஸ்.ராயன்