ஐந்து வகை நிலங்களுக்கும் உரிய தெய்வம், உணவு, தொழில் பற்றி விளக்கும் நுால். தமிழர்கள் நிலங்களை வகைப்படுத்தி அதற்கேற்ப பண்பாட்டோடு வாழ்ந்ததை விவரிக்கிறது.
சூழல் மண்டலம், ஐந்து வகை நிலங்கள், ஐந்திணை வாழ்வியல், வழிபாடு, வேளாண்மை, மலை போன்ற தலைப்புகளில் தமிழரின் வாழ்வியலை விளக்குகிறது. வாழ்விற்கு உதவும் உயிரற்ற காரணிகள் பற்றி விளக்குகிறது.
முல்லை நிலத்தில் பசு வளர்ப்பு, உழவுத் தொழிலை சொல்கிறது. தை மாத விழாக்கள் பற்றி விரிவாக விளக்குகிறது. ஜல்லிக்கட்டு, உரி அடித்தல், வழுக்கு மரம் பற்றிய விபரம் உள்ளது. பல்லவ மன்னர்கள் அமைத்த ஏரிகள் பற்றி சொல்கிறது.
ஆய்வாளர்களுக்கும் பயன்படும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்