தமிழக தென்மாவட்ட கிராமங்களில் சேகரித்த கணித விளையாட்டு தொகுப்பு நுால். நடைமுறையில் இருந்த பழைய அளவுமுறைகளையும் கூறுகிறது.
புதிர் கணக்கு, தங்கக்கட்டி, எலி, மோதிரம், பனங்காய், மாம்பழம், வடை, பூ, கழுதை போன்றவற்றை கொண்டு உருவாக்குகிறது. மூளைக்கு வேலை கொடுக்கிறது.
மரத்தடியில் நிற்பவரிடம் கிளி கூட்டம் போடும் கணக்கு, அறிவு கண்களை திறக்கிறது. மாமியார் சுட்ட, 81 வடைகளை, மூன்று மருமகன்கள் எப்படி பிரித்தனர் என சுவாரசியப்படுத்துகிறது. கணிதம் கற்பதற்கு கஷ்டமான பாடம் என கருதுவோருக்கு, விளையாட்டாக மனதில் பதிய வைக்கிறது. மாணவ -– மாணவியரிடம் சிந்தனை, அறிவை துாண்டும். பெற்றோர், ஆசிரியர் வாசிக்கலாம்.
– -டி.எஸ்.ராயன்