மூத்த பத்திரிகையாளர் எழுதியுள்ள விடுதலைப் போராட்ட ஆவணமாக மலர்ந்துள்ள நுால். இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நின்ற பத்திரிகையாளர்களின் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தொகுத்து தருகிறது.
மொத்தம், 133 தலைப்புகளில் விடுதலைப் போராட்ட காலம் விரிவாக பதிவாகியுள்ளது. இந்திய வரலாற்றின் மற்றொரு பக்கத்தை காட்டுகிறது.
ஆங்கிலேயருக்கு எதிராக, எழுத்திலும், செயலிலும் பத்திரிகயைாளர்களின் செயல்பாடு இருந்ததை விரிவாக பதிவு செய்கிறது.
ஆங்கிலயேர் நடத்திய பத்திரிகைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தை மிகவும் கொச்சைப்படுத்தி எழுதின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதழ்கள் தோன்றின. அவற்றில் வெளிவந்த ஆக்கங்கள் பற்றியும் விவரிக்கும் நுால்.
– ராம்