பழங்கால தமிழகத்தில் மருத்துவராகச் செயல்பட்டவர்களின் குல வரலாற்றை அறிமுகம் செய்யும் நுால். ஆதி மருத்துவர் சமூகம், அம்பட்டர், பார்பர், நாவிதர், மங்களா போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது.
உயிர் காப்பதை குலத்தொழிலாகக் கொண்டிருந்த சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் முடி திருத்தும் பணியை மேற்கொண்டதும், ஒப்பனை செய்பவராக இருந்ததும் பற்றி விளக்கம் தருகிறது.
மன்னர், பிரபு, ராஜகுரு என யாருமே சிகை அலங்காரம் செய்ததில்லை என உரைக்கிறது. காயம் ஏற்படும் போது மட்டுமே, மயிர் நீக்கம் நடக்கும் என பதிவு செய்கிறது. மருத்துவ குலம் பற்றிய நுால்.
– ராம்