பூச்சியியல் பற்றி அறிவூட்டும் நுால். அனைத்து வயதினரும் படிக்கத் தகுந்தது. பொது அறிவை வளர்க்கும்.
எறும்புகள் வாசனை உணர்வை இழந்தவுடன் அழிவை சந்திக்கும் போன்ற உண்மைகளை எடுத்துரைக்கிறது. வெட்டுக்கிளியின் நிற மாறுபாடு, ஆறு கால், நான்கு இறக்கைகள் தனித்துவத்தை காட்டுகிறது. பட்டாம்பூச்சியின் கால்களால் சுவைக்கும் திறனை விளக்குகிறது.
எறும்புகள் பற்றி வியப்பூட்டும் தகவல்களை தருகிறது. பூச்சி உலகத்தைப் பற்றிய புரிதலை வளப்படுத்துகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைத் தேடுபவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. அடிக்கடி கவனிக்கப்படாத உலகத்துக்குள் செழுமையான பயணத்தை துவங்குவதை உறுதி செய்கிறது.
– வி.விஷ்வா