தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நுால். வாழ்வில் சரி, தவறு புரியாமல் திணறுவோருக்கு வழிகாட்டுதல் தருகிறது.
விட்டு கொடுத்தலில் இருக்கும் மனநிறைவை கூறுகிறது. சுமுகமாக சென்று கொண்டிருக்கும் உறவில், பிறர் தலையீடு ஏற்படுத்தும் பிரச்னையை கையாள கற்றுத் தருகிறது. பிறர் மீது மட்டுமே குறை கண்டு, தன் மீதுள்ள குறைகளை நினைக்கவே யோசிக்கும் மனிதர்களை சாடுகிறது.
மற்றவர்களுக்கு குறையாக தெரிந்தாலும், தன் உடல் அமைப்பை நேசிக்கச் சொல்கிறது. வாழ்க்கையில் கற்றுக்கொண்டே இருப்பது தான் சிறப்பு என கூறுகிறது. தன்னைத்தானே விரும்புவதில் முதல் வெற்றி உள்ளதாகக் கூறுகிறது. பயம், கோபம், குற்ற உணர்வு, வெறுப்பை வேரறுக்கச் சொல்கிறது. அர்த்தம் உடையதாக வாழச் சொல்லும் நுால்.
– -டி.எஸ்.ராயன்