கிழக்காசிய நாடான கொரியாவில் கிராமப்புற மக்கள் பேசும் கதைகளின் தொகுப்பு நுால். உலகம் முழுதும், மக்களின் சிந்தனை வளர்ச்சி சீராக இருப்பதை உறுதி செய்யும் விதமாக உள்ளது.
வாய்மொழியாக வழங்கிய கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை இலக்கிய சுவையூட்டும் வகையில் உள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் வாழ்நிலையை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளதை காட்டுகிறது. தொகுப்பில் அது போன்ற கதைகள் உள்ளன.
அவற்றை படிக்கும் போது, எங்கோ, எப்போதோ கேட்ட நிகழ்வுகள் நினைவு அடுக்கில் மலரும். சாதாரணமாக வாழும் மக்கள், சூழ்நிலையை அணுகும் விதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை எல்லாம் பதிவாகியுள்ளது. நாட்டுப்புறங்களின் ஆன்மாவை, மொழி கடந்து நினைவூட்டும் நுால்.
– ஒளி