சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்ப வாழ்வின் சுவாரசியங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
பிள்ளைகள் வளர்ந்து, ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தாயின் தற்போதைய மனநிலை, ‘அம்மாவுக்கென்று ஓர் இடம்’ கதையில் கூறப்பட்டுள்ளது. மகன் புரிந்து கொள்வதில்லை என ஆதங்கப்படும் தாயிடம், மருமகள் நிலையை எடுத்துக் கூறியதும், தாய் மனநிலை மாறுகிறது.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவப்படுத்தும் வகையில் உள்ள, ‘சுதந்திர தினம்’ சிறுகதை யோசிக்க வைக்கிறது. மாற்றுத் திறனாளியாக உள்ளவரை திருமணம் செய்யும் பெண்ணின் கதையும் உள்ளது. படிக்கத் துாண்டும் வகையிலான சிறுகதை நுால்.
– முகில் குமரன்