கொரோனா தொற்று ஊரடங்கு கால களத்தில் எழுதப்பட்ட நாவல். வீடடங்கி கடும் அவதிக்குள்ளான குடும்பத்தின் போராட்டம், உணர்வலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாழ்வாதாரத்தையே ஆட்டங்காணச் செய்த சூழல்கள் பதிவாகியுள்ளன. இணைய வழிப் படிப்பில் தடுமாற்ற நிலை, புரிபடாத கற்பித்தல், இடைநிற்றலை எண்ணிப் பார்க்க வைக்கிறது.
கொத்து கொத்தாக மக்கள் இறந்த கொடுமை, பீதியில் வாழ்வை நகர்த்திய மனநிலை, மருத்துவர்களே பலியானது மீள்பார்வைக்கு வருகின்றன.