மரபுப் பாக்களுள் வெண்பா பாடுவது சிலருக்கே வாய்க்கும். அதிலும் அந்தாதியாக 108 குறள் வெண்பாக்களால் யாக்கப்பட்டுள்ளது.
சுற்றத்தார் சூழலே சால்பு. சால்பு உடைய சான்றோர் சரித்திரமாய் வாழ்ந்திடுவர். கடன் பட்டார் நெஞ்சத்தின் கண்ணீர் இயம்பும் விடம்பட்ட ஊனின் வலி. சால்புடைய நெஞ்சுதனில் சஞ்சலம் அண்டாமல் ஆல விழுதாய் தாங்கிடும் அன்பு.
இது போன்ற நெறிகள் முழுதும் காணப்படுகின்றன. பெண் கல்வி, தன் முனைப்பு, விட்டுக் கொடுத்தல், அன்பின் புரிதல், உழவின் உயர்வு, இல்லற இனிமை, ஆள்வினை உடைமை என நேர்மறை சிந்தனைகள் விதைக்கப்பட்டுள்ளன. வள்ளுவரின் அடியொற்றி வாழ்க்கை முறையை விளக்கும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்