அறிவியல் உண்மைகளை நடப்பு செயல்பாடுகளுடன் பொருத்தி காட்டும் நுால். அனுபவங்களின் வழியாக விஞ்ஞானத்தை புரிய வைக்கிறது. உடலியல், மருந்தியல், உலகியல் பற்றிய புலனாய்வாக அமைந்துள்ளது.
உலகின் இயக்கம் எவ்வளவு புதுமையான இயல்பை உடையது என்பதை காட்டுகிறது. சாதாரண செயல்கள் விஞ்ஞானத்தின் வகை மாதிரிகளாக இருப்பதை எடுத்துரைத்து புரிய வைக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அறிவியலுடன் புரிந்து கொள்ள ஏதுவான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
அறிவியலை அன்றாடம் பரிசோதனை முறையில் விளங்கிக் கொள்ள கற்பிக்கிறது. செயல்களின் மாற்றுக் கோணத்தை விவரித்து அறிவூட்டுகிறது. அறிவியலின் இருப்பை மிகச் சுலபமாக புரிந்து உணர்ந்து, வாழ்வை அமைக்க வகை செய்யும் நுால்.
– மதி