வள்ளுவர் இயற்றிய திருக்குறள், கடைச்சங்க படைப்புகளில் ஒன்றான கலித்தொகை எடுத்துரைத்த வாழ்வு நெறி, பண்பாட்டு நிலை, பழக்க வழக்கங்கள், அறக் கருத்துக்களை விளக்கும் நுால். ஆசிரியர் வரலாறு, அமைப்பு, பொருள் நுவலும் முறையை விரிவாக அலசுகிறது.
களவு, கற்பு நெறி பற்றி கூறும் கருத்துக்கள் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. களவு நெறியில் தகையணங்கு உரைத்தல், குறிப்பறிதல், புணர்ச்சியில் மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், வரைவிடை வைத்துப் பொருளீட்டல், கற்பு நெறியில் இல்லறப் பயன்கள், பிரிவு நிலை, படர் மெலிந்திரங்கல், பசப்புறு பருவரல், புணர்ச்சியின் விதும்பல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களை ஆய்வு செய்வோருக்கு பயன்படும்.
– புலவர் சு.மதியழகன்