வைகை பாயும் வளமான மதுரை மாவட்ட தோற்றம், வரலாறு, வாணிகம், தமிழ்ப் பணி என ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால்.
மதுரையில் பாலையும், நெய்தலும் இல்லை. நாக மலை, யானை மலை, அழகர் மலை, பழனி மலை வளம் மிக்கன. வளமான வேங்கை, மா மரம், சந்தன மரம், வேம்பு, மஞ்சக்கடம்பை, மருது, வாகை மரங்கள் உள்ளன.
ஆறுபடை கோவில்களில் திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை இங்குள்ளன. சமணர் மலைப்படுக்கைகள், கிறிஸ்துவ தேவாலயங்கள், தமிழ் வளர்த்த இடங்களும் உள்ளன.
மதுரை வந்த தெலுங்கு பேசும் இனத்தாரின் பங்களிப்பு பட்டியல் உள்ளது. மதுரையின் பெருமை பேசும் தகவல் புதையல்.
– முனைவர் மா.கி.ரமணன்