இசையால் நோயைத் தீர்க்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஆராய்ச்சி செய்து, கருத்துக்களை எளிய நடையில் தொகுத்துள்ள அரிய நுால்.
தாலாட்டு, ஆடல் பாடல், இன்பம், துன்பம், ஒப்பாரி என வாழ்வின் எல்லா நிலையிலும் இசை ஆதிக்கம் இருப்பதை துலக்குகிறது.
ராகங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருகிறது. ராகங்களுக்கான ரச பாவங்கள் பட்டியலும் உள்ளது. செவி உணர்வதை மனம் உள்வாங்கி உடலில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிய விளக்கம் வியக்க வைக்கிறது.
இசை மருத்துவத்துக்கு ஆராய்ச்சி ஆவணமாகத் திகழும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு