இமயமலை பகுதியில் மக்களை தாக்கிய ஆட்கொல்லி சிறுத்தையை வேட்டையாடிய அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் தமிழில் தரப்பட்டுள்ளது.
நள்ளிரவில் குடியிருப்பு பகுதி வீடுகளில் புகுந்து, மனிதர்களை துாக்கிச் சென்ற சிறுத்தையை வேட்டையாடச் செல்பவரின் அனுபவமாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறுத்தையை எதிர்கொண்ட விதம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடும் வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாறும் சூழலை மிகத் தெளிவாக விவரிக்கிறது. ஏமாந்து போனாலும் சோர்ந்து போகாத மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஆட்கொல்லி சிறுத்தையை பின் தொடர்ந்து சுட்டுக் கொன்ற அனுபவத்தை விவரித்து சுவாரசியம் தரும் நுால்.
– மதி