எழுத்தே சொல்லாகி பொருள் உணர்த்தும் சீன மொழி கவிதைகளின் தொகுப்பு நுால். மையக் கருவும், உணர்வும் மாறாமல் எளிமையாக தமிழில் தரப்பட்டுள்ளது.
சீன அதிபராக இருந்த மாசே துங் பல காலகட்டங்களில் எழுதியவை கால வரிசைப்படி தொகுத்து தரப்பட்டுள்ளது. விரும்பி படிக்கும் நடையில் அமைந்துள்ளது. உணர்வை புரிந்து, கருத்துக்களை எளிமையாக கடத்துகிறது. சீன மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை இந்த கவிதைகள்.
நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில்மூலக்கவிதை சீன மொழியில் தரப்பட்டுள்ளது. அடுத்து, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. தொடர்ந்து, கவிதை தமிழில் தரப்பட்டுள்ளது. உணர்வு மயமாக்கி எழுச்சி ஊட்டும் வகையில் உள்ள அழகிய கவிதைகளின் தமிழாக்கமாக மலர்ந்துள்ள நுால்.
– ராம்