காஷ்மீரில் ஏற்பட்டு வரும் அரசியல் அதிகார மாற்றங்களை விரிவாக தந்துள்ள நுால். வரலாற்று சான்றுகளுடன் தகவல்களை தொகுத்து முன்வைக்கிறது.
பழங்காலத்திலே பயணியரை கவர்ந்திழுப்பது காஷ்மீர் பகுதி. இடைக்காலத்தில் வன்முறை களமாக மாறியிருந்தது. சட்ட விதி மாற்றத்தால் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மொத்தம், 26 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல் களத்தில் காஷ்மீர் பெற்று வரும் மாற்றங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளது. வன்முறையின் மூலவேர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதை நீக்குவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள் பற்றிய விபரங்களையும் தெளிவாகத் தருகிறது. காஷ்மீர் அரசியல் நுால்.
– மதி