எதிர்கால சமுதாயம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். வளர்ச்சி கருத்துக்களை உடையது.
சமுதாய மலர்ச்சிக்கு ஆணிவேராக உள்ளது பொருளாதாரம். அது, பல கிளைகளாக விரிந்து பரந்துள்ளது என்பதை தெளிவாக்குகிறது. இயற்கை தரும் கொடை பற்றியும், இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சிந்தனைகளை முன்வைக்கிறது. இயற்கையுடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டுகிறது.
பட்டம் பெறுவதுடன் கல்வி கற்பது முடிந்துவிட்டது எனக் கருதும் இளைஞருக்கு தக்க அறிவுரை புகட்டுகிறது. உலகம் அடைந்து வரும் மாற்றங்களை அழகாக விவரிக்கிறது. வளர்ச்சியுடன், பண்பாடு, கலாசாரத்தை தொடர்புபடுத்தும் நுால்.
– ஒளி