அரசியலமைப்பில் சமூக, பொருளாதாரம், சமவாய்ப்பு, பெண்ணுரிமை விதிகள் ஏழை மக்களை சேராத சூழலை விளக்கும் நுால்.
சாதிப்பிரிவினை அகற்றப்படாததை முன்வைக்கிறது. கருத்துக்கள் சமூக நிகழ்வுகளின் உதாரணங்களோடு முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் பற்றிய விழிப்புணர்வு இன்மை, சாதிப்பாகுபாடு தீவிரத்தால் ஆணவக் கொலைகள் நிகழ்வதை முன்வைக்கிறது. பெண்கள் அவதுாறாகச் சித்தரிக்கப்படுவதை விமர்சிக்கிறது. உறவுகளால் தாக்குதலுக்குள்ளாவது குறித்து விழிப்பைத் தருகிறது. சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அறிய உதவும் பயனுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு