மன அமைதி, நிம்மதியாக வாழ தியானம் மிகச்சிறந்த மருந்து என விவரிக்கும் நுால். தியானத்தின் வகைகள், எப்படி அமர வேண்டும், எந்த நேரத்தில் செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடுகள் குறித்து பகிர்கிறது.
வயதானவர்களுக்கு மட்டுமில்லை, இளம் வயதினருக்கும் பயன் அளிக்கும் என்கிறது. குறிப்பாக, மாணவ – மாணவியர் செய்தால் கவனம் செலுத்தும் ஆற்றல் பெருகும் என்கிறது.
தியானம் செய்யும்போது வரும் எண்ணங்கள், கவனச்சிதறல், துாக்கம், தொந்தரவுகளை எப்படி கையாள வேண்டும் என பதிய வைக்கிறது. அலை பாயும் மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொடுக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்