புகழ் பெற்ற விஞ்ஞானிகள் குறித்து தகவல்கள் தரும் நுால்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து மற்றும் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் நம் நாட்டைச் சேர்ந்தோர் பற்றியும் உள்ளது. எளிய நடையில் தரப்பட்டுள்ளது. கேள்வி – பதில் போல் சுலபமாக படிக்கும் வகையில் உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கும் வகையிலான செய்திகளுடன் அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு விஞ்ஞானியின் உழைப்பு, முயற்சியால் முன்னேறி சாதித்தது வரை தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. மாணவ – மாணவியர் பயன்படுத்த ஏற்றது. விஞ்ஞானிகளையும், அவர்களின் மேலான செயல்பாடுகளையும் அறிய உதவும் நுால்.
– ராம்