வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிகளை படம் பிடிக்கும் நாவல். குடும்ப பொறுப்புகளில் உள்ள நுணுக்கங்களை திறமையாகப் படம் பிடித்து காட்டுகிறது. தன்னலமற்ற அர்ப்பணிப்பு, சமூக விதிமுறை மீறி, இணைப்பின் ஆழத்தை வலியுறுத்துகிறது. துன்ப காலங்களில் அன்புக்குரியவர்களிடம் இருந்து கிடைக்கும் ஆறுதலையும் நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.
உடல் ரீதியான துன்பங்களுக்கு மத்தியிலும் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை, கதையில் ஆன்மிகத்தின் சிறப்பை உணர்த்துகிறது. நாட்குறிப்பு பதிவுகள் கதாபாத்திரங்களின் உணர்ச்சியின் பிரதிபலிப்பாக உள்ளன. கதைசொல்லியாகவும், கதாநாயகனாகவும் ஆசிரியர் போடும் இரட்டை வேடம் தனித்துவமாக உள்ளது. உண்மை சார்ந்த நிகழ்வுகளால் உருவான கதை நுால்.
– -வி.விஷ்வா