ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளோருக்கு உதவும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நுால். மனிதர்களுக்கு ஐம்புலன்கள் உதவுவது போல, ஜாதகத்தில் உள்ள ஐம்புலன்களை விவரிக்கிறது.
வாரம் என்றால் கிழமையை குறிக்கும். திதி என்றால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவு குறித்து பேசும். திதியின் பாதி தொலைவு தான் கரணம். இது மாதிரி, 27 நட்சத்திரங்கள், யோகங்களை குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கிரகத்திற்கும் சொந்த ஆட்சி வீடுகள் உள்ளன. உச்சம், நீசம், வீடுகளை பற்றிய குறிப்புகள் முறையாக தரப்பட்டுள்ளன.
பஞ்சாங்கம் பற்றி தெரிந்து கொள்ளும் விதமும், குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கும் விதமும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜோதிடம் கற்போருக்கு ஏற்ற நுால்.
– சீத்தலைச்சாத்தன்