அகத்தியர், போகர், கோரக்கர் என்ற ஆதிகால சித்தர்கள் முதல் சாய்பாபா, ரமணர், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், காஞ்சி பெரியவர் என்ற சமகால அருளாளர்கள் தொட்டு அற்புதங்கள் நிகழ்த்தியவர்களை தரிசித்து அற்புதமாக வர்ணித்துள்ள நுால்.
சித்தர் படங்களின் பின்னிணைப்பு பூஜிக்கத்தக்க விதத்தில் உள்ளன. ராமலிங்க வள்ளலாரின் சத்திய ஞான சபையில் இருக்கும் சங்கிலி, மனிதன் ஒரு நாளில் வெளியிடும் மூச்சுக்காற்றின் எண்ணிக்கையில் உள்ளது. அதை வேண்டிக் கொண்டால் நல்லது நடக்கும் என விவரிக்கிறது.
‘வாழ்க வளமுடன்’ என வாழ்த்துவது எவ்வளவு புண்ணிய செயல் என வேதாத்திரி சுவாமிகள் சொன்ன மந்திரத்தை விளக்குகிறது. சித்தர்களை பற்றி அறிய உதவும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்