நிலையான எண்கள் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ளன. அவற்றைக் கூட்டினால் நிலையான எண்கள் தான் வரும். பிறந்த எண் என்பது பிறந்த ஆங்கில தேதி. அதிர்ஷ்ட எண் என்பது பிறந்த ஆங்கில தேதி, மாதம், ஆண்டை கூட்டுவதால் வரும் நிலையான எண். இதற்கு எந்த மாதிரி அதிர்ஷ்ட பெயர் அமைக்க வேண்டும். அந்தப் பெயர் எண்ணும் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுபட விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ள நுால்.
இது பெயர் எண் மதிப்பு என அழைக்கப்படுகிறது. தமிழ் தெய்வம் முருகனின் மதிப்பெண் ஒன்பது என்கிறது. எந்த எண்ணுக்கு உரியோர் எந்த நவரத்தினக்கல் அணிய வேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் உள்ளன. எல்லாருக்கும் அதிர்ஷ்டம் உண்டு; அது எப்போது வரும் என்பது தான் எதிர்பார்ப்பு.
– சீத்தலைச் சாத்தன்