சிலப்பதிகாரக் காப்பியத்தை முற்றிலும் நாட்டுப்புறவியல் நோக்கில் அணுகி ஆய்வு செய்து கருத்துகளை தொகுத்து தரும் நுால். இசை, பாடல், ஆடல், கூத்து வகைகள் பற்றி விரிவாகத் தருகிறது.
சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் நாட்டுப்புற மரபு, தொல்காப்பிய மரபு, சங்க இலக்கிய மரபை ஒப்புமைப்படுத்தி விளக்குகிறது. கண்ணகி கதை, சிலப்பதிகாரமாக உருவாவதற்கு முன், தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வந்ததை முன்வைக்கிறது.
கோவலன்- – கண்ணகி தலைமைக் கதையோடு, கிளைக் கதைகள், துணைக் கதைகள், நாட்டுப்புறக் கதைகளை காட்டுகிறது. சிலம்பில் கூறப்படும் தொன்மங்களை விளக்குவதோடு, மாறுபட்ட நிகழ்வுகள் பல இடங்களில் பரவியிருப்பதை காட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு