தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீடு நடைமுறையில் வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் நுால்.
பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையால் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்று கூறப்பட்ட சமூகத்தில், பிற்காலத்தில் ஜாதிய பாகுபாடு ஏற்பட்டதை எடுத்துரைக்கிறது. வளர்ச்சியில் பின்தங்கியிருந்தவர்களை முன்னுக்கு கொண்டு வர நடந்த போராட்டங்கள், அதை நடத்திய அமைப்புகள் குறித்த விபரங்களை கால அடிப்படையில் பதிவு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு, அரசு நடைமுறையாக மாறியது குறித்த விபரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இதில் ஏற்பட்ட தடைகள், அது தொடர்பாக நடந்த வழக்குகள், தீர்ப்புகள் என தெளிவுரைக்கும் நுால்.
– ராம்