தமிழ் மொழியின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளை, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களில் 300 குறளுக்கு பொருளும் நயமும் உரைக்கும் நுால். அவ்வை, பாரதியார் பாடல்களோடு, அறப் பாடல்களையும் மேற்கோள் காட்டி விளக்கப்பட்டு உள்ளது.
காலத்திற்கு ஏற்ப குறளுக்கு விளக்கம் சொல்கிறார். நல்லவர் என்று நம்பப்பட்டோர், பதவிக்கு வந்த பின் பாதை மாறுவதை காண்கிறோம் என்று கட்சி மாறுபவரை சாடுகிறார். கல்வியின் உயர்வை உணர்த்துகிறார். விண்வெளியில் அந்தரத்தில் ஈர்ப்பு சக்தியால் பூமி தொங்குகிறது என்ற அறிவியல் உண்மையை விளக்கமாகத் தருகிறார்.
முத்தான குறட்பாக்களுக்கு சத்தான விளக்கம் தந்து அசத்தும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்