திறன்களை மேம்படுத்த வழிகாட்டும் நுால். கல்வி நிறுவனங்கள் போதிக்காத முக்கிய விஷயங்கள் குறித்து பேசுகிறது. அன்றாடம் சூழலை முறையாக அணுகும் பயிற்சிகள் குறித்த யோசனையை முன் வைக்கிறது.
கல்வியை முடித்த பின், வேலைத் தளங்களை அணுக முறையான, பண்பாடான பயிற்சி இன்மையால், பின்னடைந்து நிற்கும் இளைஞர்களை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளது. திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு உரிய கருத்துகள் துாண்டுகோலாக திகழ்கின்றன.
இளைஞர்கள் பொதுத் தளங்களில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை அணுகுவதற்கு உரிய பயிற்சியோ, வழிமுறையோ இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதன் முக்கியத்துவத்தை அலசி, வாழ்க்கையில் திறன் பயிற்சிக்கான அவசியத்தை வலியுறுத்தும் நுால்.
– மதி