சுயமுன்னேற்ற வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ள நுால். சோர்வு ஏற்படாத வகையில் ஒவ்வொரு கருத்தும் கூறப்பட்டு உள்ளது.
துவக்கத்திலேயே நிறைய எதிர்பார்ப்பது தேவையற்றது. என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
எதையும் எதிர்பார்க்காமல் ஏற்பது, உறவுகளை மேம்படுத்தும் என்ற ரீதியில் அலசல் கருத்துக்களை முன்வைக்கிறது.
வாழ்க்கை ஒரு நாடகம். அதனால், அவரவர் பாத்திரத்தில் நடித்தால் மட்டுமே போதும். காலம் கடத்துதல், மறதி, சோம்பல், அளவு கடந்த துாக்கம் ஆகியவை வாழ்க்கையை நாசப்படுத்தும் என கோடிட்டுக் காட்டுகிறது.நம்பிக்கையூட்டி சுய முன்னேற்றத்தை துாண்டும் நுால்.
– முகில்குமரன்