விடுதலை போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். உலக நாடுகளை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டது.
முதல் பாகத்தில் இந்திய வரலாறு விரிவாக இடம் பெற்றுள்ளது. ஆசியாவில் சீனா, ஜப்பான் மாற்றங்கள் குறித்து இடம் பெற்றுள்ளது. வரலாற்றை சுவாரசியமாக அணுகி ஆராய்ந்து, விரும்பி படிக்கும் வகையில் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில், 81 கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாக உள்ளன. உலக மக்களையும், மண்ணையும், ஆட்சி அதிகாரங்களையும் புரியும் விதமாக தரப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் வாசிக்க ஏற்றதாக அமைந்துள்ள நுால்.
– ராம்