இளமைக்கால வறுமை, துயரம், குறும்புத்தனம், குடும்பப் பாரம் திரைப்படத் துறையில் பட்ட அனுபவம் அனைத்தையும் பாடல்களாக வடித்துள்ள நுால்.
சரியானதை மட்டுமே செய்வதும், சரி இல்லாததை கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதும் சிறந்த நிர்வாகம் என எதார்த்த நிலையை விவரிக்கிறது. சினிமாவில் பேச்சும், சிரிப்பும், செயலும் அலங்காரமாக இருக்க வேண்டும்; போலியாக வாழ வேண்டும் என விளக்குகிறது.
சினிமா தோல்வி தந்தாலும் அவமானப்படுத்தவில்லை எனக் குறிப்பிடுகிறது. கற்றுக் கொண்ட பாடங்களையும், பட்டறிவையும், காதலையும் பாடல்களாகத் தருகிறது. ஒவ்வொரு பாடலும் தோன்றிய சூழ்நிலையும், பாடலையொட்டிய நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இசையமைத்தவரும் சுட்டப்பட்டுள்ள நுால்.
– புலவர் சு. மதியழகன்