திருவள்ளுவரின் உவமைகளை தெளிவாக விளக்கும் ஆங்கில நுால். தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிப்பதற்கு உதவும்.
‘என்பிலதனை’ என்ற குறள் உவமையை, நான்மணிக்கடிகை செய்யுளையும், திருவாசகத்தின், நீத்தல் விண்ணப்ப பாடலையும் ஒப்பிடுகிறது. ‘ஒருமையுள்’ என்ற குறள் உவமையை, திருமூலரின் திருமந்திர செய்யுளை ஒப்பிட்டு காட்டுகிறது.
‘தவமறைந்தல்லவை’ என்ற குறளில் உவமையை விளக்க, திருமந்திரம் பாடலை ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. ‘அரங்கின்றி’ என்ற குறளில் உவமையை, நற்றிணை பாடல் கொண்டு விளக்கியுள்ளது.
பரிமேலழகரின் உரையை, எளிய ஆங்கிலத்தில் படிக்க இன்பமாக உள்ளது. திருக்குறள் செய்திகள் அருமை.
– முனைவர் கலியன் சம்பத்து