சாஸ்திரப்படி நிறை, குறை தெரிந்து, வாஸ்து அடிப்படையில் வீட்டை மாற்றி அமைக்க அறிவுரை கூறும் நுால். கட்டிய வீட்டின் வாஸ்து குறைகள், வாங்கியதில் குறைபாடுகளை எப்படி எல்லாம் தவிர்க்கலாம் என விளக்கம் தருகிறது.
‘வீட்டின் குறை தான் படுத்துகிறது’ என்று புலம்புவோருக்கு, நிவாரணமாக அதிக செலவில்லாமல் செயல்படுத்தும் அறிவுரைகளை சொல்கிறது.
வீடு கட்டிய மனையின் அளவு, தோஷமாக இருந்தால்எப்படி எல்லாம் மாற்றலாம் என்பது ஆராய்ந்து சொல்லப்பட்டு உள்ளது. தலைவாசல் எப்படி அமைய வேண்டும்; அமையாவிட்டால் எளிமையான மாற்று ஏற்பாடுகளையும் விபரமாகச் சொல்லியுள்ளது.
சொந்த வீட்டில் வசிப்போருக்கு வரப்பிரசாதம்.
– சீத்தலைச்சாத்தன்