கடல் சார்ந்த பகுதி வாழ்க்கை முறையை ஆய்வு பார்வையில் வெளிப்படுத்தும் நுால். தாவரங்கள், உயிரினங்கள், கலாசாரம், பண்பாடு என தகவல்கள் உள்ளன.
சங்க இலக்கியங்களில் நெய்தல் தாவரங்கள் என்ற தலைப்பில் துவங்குகிறது. மீனவ மக்களின் மரபு வழி உணவு முறைகள், நெய்தல் நிலத்தில் விளையாட்டு, பருவக்காற்று வகைகள், மீன்பிடிக் கருவிகள், தொழில் சார்ந்த பாடல்கள், சங்ககால கடல் வாணிபம் என ஆய்வு செய்து கருத்துக்களை தெரிவிக்கிறது.
உரிய ஆதாரங்களை முன்வைத்து தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. மீனவ மக்களை, கடல் சார்ந்த பழங்குடிகள்என ஆய்வு தகவல்களுடன் உறுதிப்படுத்துகிறது. இலக்கியச் சுவையுடன் கடற்கரை பண்பாட்டை பேசும் நுால்.
– மதி