சொத்து ஆவண பதிவு பத்திரங்கள் எழுதுவதற்கு வழிகாட்டும் நுால். சட்ட விதிமுறை விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
இந்த புத்தகம் ஒன்பது அத்தியாயங்களாக பகுத்து எழுதப்பட்டுள்ளது. மொத்தம், 60 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விற்பனை, அடமானம், குத்தகை அல்லது வாடகை, செட்டில்மென்ட் மற்றும் உயில், விருப்புறுதி ஆவணம், ஹிந்து வாரிசுரிமை சட்டம்,கூட்டு ஒப்பந்தம், தத்து சட்டங்கள் என பிரித்து, போதிய துணை தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.
பத்திரப் பதிவில் உள்ள நடைமுறைகள், சட்ட நுணுக்கங்களை அறிந்த கொள்ள பத்திரம் எழுதுவோருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் விழிப்புணர்வு தரும் நுால்.
– ராம்