திருக்குறளில் இல்லறம், துறவு இரண்டுக்குமான அறங்களை விளக்கி தெளிவுபடுத்தும் நுால்.
குறளில் உள்ள 38 அதிகாரங்களில் பாக்களை எளிமைப்படுத்தியுள்ளது. சொற்களின் பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படித்தால், மறக்காமல் இருக்கும் வகையில் வெண்பாக்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
கடவுள் வாழ்த்து என குறிப்பிட்டுள்ள அதிகாரத்தில், ‘கடவுள்’ என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆய்வு செய்து குறளின்காலம் மதிப்பிடப்பட்டுள்ளது. சமண கொள்கை தமிழகத்தில் வேரூன்றிய காலத்தில் இந்த நுால் தோன்றியதாக கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன. காலத்தை கடந்து நிற்கும் நீதி நுால் திருக்குறள் என்பதை எடுத்துச் சொல்லும் நுால்.
– ஞாநி