திருக்குறளை அறிவியல் பார்வையில் நோக்கி கருத்துக்களை பகிரும் நுால்.
மென்திறன்கள், உணர்வுமய நுண்ணறிவு, முடிவு எடுக்கும் திறன், அறிவின் மாண்பு, பொறாமை, முரண்பாடுகளை தவிர்த்தல், மன்னிப்பின் மாண்பு, கடமை உணர்வு, அர்ப்பணிப்பு, மனிதவள மேம்பாடு, கால மேலாண்மை என பல தலைப்புகளில் ஆராய்ந்துள்ளது.
உடல் ரீதியான வன்திறனை விட, அறிவு ரீதியான நுண்ணறிவு மென்திறனை வள்ளுவர் போற்றுவதாக தெரிவிக்கிறது. விட்டுக் கொடுக்கும் மனம் கொண்டவரே நட்பை வளர்க்கும் திறன் உடையவர் என நிரூபிக்கிறது. விடாமுயற்சி வெற்றி கொள்ளும் என்பதற்கு திருமால் அடியளந்த திருக்குறளை காட்டுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்