உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள குறுநாவல். கன்னி முயற்சியாக வெளிவந்திருக்கிறது. முழுக்க உண்மை சார்ந்து இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது; கற்றுக் கொள்ள பாடம் இருக்கிறது; அதிகம் விரும்பும் நிம்மதியை தேடுகிறது.
நாவலின் முக்கிய கதாபாத்திரம் சின்ன ஜமீன்தார். இதை மையப்படுத்தி நேர்கோட்டில் பயணிக்கிறது. சரளமான நடை வசீகரமாக இருக்கிறது. திடுக்கிடும் திருப்பங்களோ, ஈர்க்கும் சம்பவங்களோ இல்லை. எளிமையாக நகரும் கதைப் போக்கு தனி அழகுடன் திகழ்கிறது.
ஜமீன்தார் வாழ்க்கை நடைமுறை, உடை, உணவு முறை, அரசியல் செயல்பாடுகள் கதைப்போக்கோடு சுட்டிக் காட்டுகிறது. வாசிப்பு ருசியை விரும்புவோருக்கு புது அனுபவம் தரும் வகையிலான நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு