தமிழகத்தின் தென்பகுதிகளில் வழிபடப்பட்டு வரும் தெய்வங்களான நீலி, இசக்கி கதைகளும் வழிபாட்டுக்கூறுகளும் செல்வாக்கு பெற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஆய்வு நுால்.
வாய்மொழி வடிவிலான நீலி கதை, பிற்பாடு இசக்கி கதைப்பாடலாகப் புனையப்பட்டதாக கூறுகிறது. கி.மு., 3ம் நுாற்றாண்டு முதல், தெய்வங்களை பவுத்த, சமண, வேத சமயங்கள் ஏற்று வழிபட்ட விபரம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுகதை, கதைப்பாடல்களில் நீலி அம்மன் பற்றி குறிப்பிடுவதை தொகுத்துள்ளது. தொண்டை நாடு இருந்த பகுதியில் நீலிக்கு கோவில்கள் இருந்ததும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நீலியை எடுத்துரைக்கும் வில்லிசை பாடலும் தரப்பட்டுள்ளது. இசக்கி தெய்வம் பற்றிய ஆய்வு நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு