சங்கரதாஸ் சுவாமிகளை பற்றிய அறிமுகமாக அமைந்துள்ள ஆய்வு நுால். வாழ்க்கையை நாடக உலகத்திற்கு அர்ப்பணித்தது பற்றி எடுத்துரைக்கிறது.
திருவிளையாடல் படத்தில், ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்ற பாடல் பகுதியை எழுதியது குறித்த குறிப்புடன் அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. வெள்ளையத்தேவன் மரபில் உதித்த விபரமும் உள்ளது.
இரணியன், ராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றதை குறிப்பிடுகிறது. சுவாமிகள் நடத்திய நாடகத்தில், பாரதியாரின் ஈடுபாடு பற்றியும் உள்ளது.
– முகிலை ராசபாண்டியன்