கருணாநிதியும், தத்துவ அறிஞர் சாக்ரடீசும் தத்துவ இரட்டையர் என நிறுவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். குறளோவியத்தில் தத்துவ சாயல் உள்ளதாக பதிவிடுகிறது.
சமுதாய சீர்திருத்த கருத்துகளை மையமாக வைத்து கதை, வசனம் எழுதிய ராஜா ராணி போன்ற படங்கள், கருணாநிதியின் கிரேக்க சிந்தனையின் வெளிப்பாடு என்கிறது. பராசக்தி படத்தில் நீதிமன்றத்தை நடுங்க வைக்கும் காட்சி, சாக்ரடீஸ் வைத்த வாதத்தின் தாக்கம் போல் உள்ளதாக கூறுகிறது.
கிரேக்க தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள கருணாநிதி, படைப்புகள், சிந்தனைகள், திரைப்பட வசனங்கள், அரசியல் முழக்கங்கள் வழியாக, அதை வெளிப்படுத்தியதை ஒப்பீடு செய்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்