யாருக்குத் தான் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அறிந்துகொள்ள ஆசை இருக்காது. தனக்கு மட்டுமல்ல; குடும்பத்தாருக்கும் பார்க்க ஆசைப்படுவது இயல்பு தானே. அதை பூர்த்தி செய்யும் ஜோதிட புத்தகம். ஜென்ம லக்னத்தில் இருந்து, ஆறாவது பாவம் தான் ஆரோக்கியம் அல்லது ஆரோக்கிய குறைவு தரும் இடம். அங்கு எந்த ராசி வருகிறதோ, அதற்கு ஏற்ப பலம் அமையும் என்று சொல்கிறது.
சிலருக்கு நோய்கள் வந்தால் விரைவில் குணமாகும்; சிலருக்கு நீடிக்கும். சிலர் ஆயுள் முழுதுமே நோயால் தவிப்பர். இதற்கான காரணத்தை ஆய்வு செய்து சொல்கிறது. ஆரோக்கிய குறைபாடுக்கான பட்டியல் விரிவாக உள்ளது. அவ்வப்போது படிக்க வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்