வீதி நாடக இயக்கம் நடத்திய பட்டறை விபரங்களை விவரிக்கும் நுால். செயலாற்றுவது, விதிமுறைகள் விவரிப்பு, பெயர்களை மனப்பாடமாய் ஒப்புவிப்பது என நேரில் பார்க்கும் அனுபவம் தருகிறது.
வினோத விளையாட்டுகள் அறிமுகம், குரல் பயிற்சி வழங்குவது, முக பாவனையுடன் நடிப்பு பயிற்சி, சரிந்து விழுதல், துாக்கிப் பிடித்தல், சிலை செய்யும் முறை என்று தனித்துவம் நிறைந்த செய்திகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன.
முழு உடல் சுழற்றி பாவனைகள், அங்க அசைவுகள், சீரான நடன முறைகள், குறு நாடகங்கள், உடலை இயந்திரங்களாக பாவித்து நடத்திக் காட்டும்செய்முறைகள் யாவும் மூன்றாவது தியேட்டர் வகையை வெளிப்படுத்திக் காட்டுவதாக இருக்கின்றன. தனித்துவமான எழுத்து நடை உடைய நுால்.
– ஊஞ்சல் பிரபு