வடகிழக்கு மாநிலங்கள் குறித்து விவரிக்கும் பயண நுால். மக்களின் தனித்துவ கலாசார இயல்பும், வாழ்க்கை முறையும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தேயிலை உற்பத்தியில் அஸ்ஸாம் முன்னிலையில் இருக்கும் விபரத்தையும், சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோவில் குறித்தும் தெளிவாக விபரங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் உருவான விபரத்தையும், மேகாலயா நீர்வீழ்ச்சிகள் குறித்தும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கில் வசிக்கும் எழுத்தாளர்களின் இலக்கியங்கள், கோவில்களின் தொன்மம், புவியியல் அம்சங்கள், பாறைகள், குகைகள், வேர்ப்பாலங்கள், நதிக்கரைகள், நாகரீகங்கள் என 16 தலைப்புகளில் காட்டியிருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு