மரபுக் கவிதையில் அமைந்துள்ள நுால். இயற்கையை மிகுதியாக வர்ணித்துள்ளது. இலக்கிய இன்பத்தை தருகிறது. கல்வி வழி சமுதாய அவலங்களை நீக்கலாம் என்று சொல்கிறது.
ஆனந்தம் பெற்று வாழ்க, மழை, இலக்கியத்தின் சுவை காண்போம், ஓரெழுத்து ஒரு மொழி, சாதித் தீ அணையட்டும், சீமைக் கருவேலம், வெறுமை, போன்ற தலைப்புகளில் சொல்லியுள்ள கருத்துகள் சிந்தனையைத் துாண்டுகின்றன.
எக்காலம் என்ற தலைப்பில், காலத்தை அழைக்கும் முகமாக, காலனை அழைத்து தண்டனை தரச் சொல்கிறது. ஒரு முறைதான் மரணம் வரும். இருக்கும் நாளில் இன்புற்று வாழவேண்டும் என்று சொல்கிறது. மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என, சமூக நலனை வெளிப்படுத்துகிறது. மரபுக் கவிதை எழுதுவோருக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்